அடையாளம் தெரியாமல் அழிந்து போன மாகாணம்... மொபைல் பிணவறைகளில் குவிக்கப்பட்ட சடலங்கள்
அமெரிக்க மாகாணம் ஹவாயில் காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 101 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொபைல் பிணவறைகள் பல எண்ணிக்கையில் மெளயி நகரில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடையாளமே தெரியாதவகையில்
ஹவாய் தீவில் காட்டுத்தீயால் மூன்று முக்கிய மாவட்டங்கள் அடையாளமே தெரியாதவகையில் சாம்பலாகியுள்ளது. தற்போது சடலங்களை அடையாளம் காணும் பொருட்டு, டி.என்.ஏ மாதிரிகளை ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினருக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
@getty
அடையாளம் காணப்படாத சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே அதிகாரிகள் டி.என்.ஏ சோதனைக்கு முன்வந்துள்ளனர். இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், குறைந்தது 1,000 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லஹைனா பகுதிக்கு மொபைல் பிணவறைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. 1,000 பேர்கள் அவரையில் மாயமாகியுள்ள நிலையில், சிறப்பு குழுவினர் ஓய்வின்றி தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
@AFP
நாளுக்கு 20 சடலங்கள் வரையில்
இதனிடையே, மாகாண ஆளுநர் கிரீன் தெரிவிக்கையில், இந்த வாரம் இறப்பு எண்ணிக்கை எதிர்பாராத வகையில் இருமடங்காகலாம் என்றார். மிக மோசமான தகவல்கள் வெளியாகும், நாம் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஆளுநர் கிரீன், நாளுக்கு 20 சடலங்கள் வரையில் அவர்கள் மீட்கவும் வாய்ப்பிருக்கிறது என்றார்.
@getty
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக அதிகாரிகள் தொடர்ந்து கோரிக்கை முன்வைப்பது அதிகரித்துள்ளதால், பொறுமைகாக்க வேண்டும் என ஆளுநர் கிரீன் கேட்டுக்கொண்டார்.
இதுவரை மூன்று சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. 41 டி.என்.ஏ மாதிரிகள் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 13 சடலங்களில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@EPA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |