ஸ்டீபன் ஹாக்கிங் உடன் காணப்பட்ட இளம் பெண்கள்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம்

Epstein Files
By Arbin Feb 26, 2026 04:11 PM GMT
Report

பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கலந்துகொண்ட எப்ஸ்டீன் நிதியுதவி அளித்த அறிவியல் கருத்தரங்கில் காணப்பட்ட பெண்கள் அனைவரும் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் புதிய விளக்கம:ளித்துள்ளார்.

அழகான இளம் பெண்கள்

மார்ச் 2006ல் அறிவியல் கருத்தரங்கிற்காக அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள செயிண்ட் தாமஸுக்குச் சென்றபோது, ​​எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பிலிப் பீபிள்ஸ் விளக்கமளித்துள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங் உடன் காணப்பட்ட இளம் பெண்கள்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம் | Hawking Event Epstein Victims Joined

அந்த நிகழ்வில் ஒரு சம்பவம் தற்போது தமக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் பீபிள்ஸ் குறிப்பிட்டுள்ளார். பேச்சுக்கள், கலந்துரையாடல்களுக்கு இடையில், நாங்கள் சிலர் காபிக்காக கூடி, மிகவும் சாதாரணமாகப் பேசுவோம்.

ஒரு சமயம் அழகான இளம் பெண்கள் எதுவும் பேசாமல் எங்களுக்கு அருகே வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம்

எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம்

ஆறு முதல் 10 பெண்கள் அப்போது அங்கே காணப்பட்டார்கள் என்றும் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீபிள்ஸ் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் சார்ந்த விவாதங்கள் நடக்கும் அரங்கில் இளம் பெண்கள் காணப்பட்டது அசாதாரணமாகத் தோன்றியது, ஆனால் பயமுறுத்துவதாக இல்லை என்றும் பீபிள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட பிறகு, வயது குறைந்த பெண்கள் மற்றும் இளம் பெண்கள் மீதான அவரது துஷ்பிரயோகம் பற்றிய வெளிப்பாடுகளுக்குப் பிறகு, அவர் தான் பார்த்ததை மறுபரிசீலனை செய்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங் உடன் காணப்பட்ட இளம் பெண்கள்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம் | Hawking Event Epstein Victims Joined

அந்த அறிவியல் கருத்தரங்கு வேளையில் காணப்பட்ட பெண்கள் அனைவரும் எப்ஸ்டீனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் என்பது தமக்கு தெரிய வருகிறது என்றும் பீபிள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினர் விளக்கம்

2006 மார்ச் மாதம் நடந்த அந்த அறிவியல் கருத்தரங்கானது Ritz-Carlton என்ற ஐந்து நட்சத்திர ஹொட்டலில் முன்னெடுக்கப்பட்டது. அங்குள்ள அறைகள் ஒரு இரவுக்கு 1,600 டொலருக்கும் அதிகமாக செலவாகும்.

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டை குவாண்டம் இயக்கவியலுடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து விவாதிக்க 20க்கும் மேற்பட்ட பிரபல இயற்பியலாளர்கள் அந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் உடன் காணப்பட்ட இளம் பெண்கள்... நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம் | Hawking Event Epstein Victims Joined

கருத்தரங்கின் போது ஸ்டீபன் ஹாக்கிங் குவாண்டம் அண்டவியல் குறித்து ஒரு உரை நிகழ்த்தினார். ஹாக்கிங் உடன் அரைகுறை ஆடையுடன் காணப்படும் இரு பெண்கள் தொடர்பிலேயே பெரும் விவாதம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தொடர்புடையப் பெண்கள் குறித்து ஹாக்கிங்கின் குடும்பத்தினர் விளக்கமும் அளித்துள்ளனர். ஆனால், தற்போது நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி பிலிப் பீபிள்ஸ் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US