எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம்
எப்ஸ்டீன் கோப்புகளில் பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் உடன் அரைகுறை ஆடையுடன் பெண்கள் காணப்பட்ட விவகாரத்தில், அவரது குடும்பம் கோபத்துடன் விளக்கமளித்துள்ளது.
ஹாக்கிங் புகைப்படம்
பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் உடன் அரைகுறை ஆடையுடன் காணப்படும் பெண் பேராசிரியரின் நீண்ட கால உதவியாளர் என்றே அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.

இயற்பியல் நிபுணரான பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் உடன் அரைகுறை ஆடையில் பெண்கள் இருவர் காணப்படும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட பல ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளைப் போலவே, பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் புகைப்படமும் எப்போது அல்லது எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்த சூழலும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், பேராசிரியர் சார்பில் புதன்கிழமை அளிக்கப்பட்ட விளக்கத்தில், அந்த இரண்டு பெண்களும் பிரித்தானியவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஹாக்கிங்கின் நீண்டகால காப்பாளர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகைப்படம் 2006 ஆம் ஆண்டு கரீபியன் தீவான செயிண்ட் தாமஸில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹொட்டலில் எடுக்கப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளனர்.
அறிவியல் கருத்தரங்கில் குவாண்டம் அண்டவியல் பற்றிய உரையை நிகழ்த்திய பிறகு, ஹாக்கிங் இந்தப் படத்திற்கு போஸ் கொடுத்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எப்ஸ்டீனும் அதே நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் புகைப்படத்தை யார் எடுத்தார்கள் என்பதைக் கூறவோ அல்லது எப்ஸ்டீன் கோப்புகளில் அது எப்படி வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்கவோ ஹாக்கிங் அலுவலகம் மறுத்துள்ளது.
மேலும், எப்ஸ்டீனுடனான ஹாக்கிங்கின் நட்பு குறித்தும் அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். அத்துடன், ஹாக்கிங்கின் உதவியாளர்கள் அரைகுறை உடைகளில் அவரை கவனித்துக் கொள்வதுடன், காக்டெய்ல்களை ருசிப்பது பொதுவான நடைமுறையா என்பது தொடர்பிலும் விளக்கமளிக்க மறுத்துள்ளனர்.
பொருத்தமற்ற நடத்தை
மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்த ஹாக்கிங், மார்ச் 2018 இல் 76 வயதில் மரணமடைந்தார். அவரது இளம் வயது முதல் வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு செவிலியர்கள் குழுவிலிருந்து 24 மணி நேரமும் கவனிப்பு தேவைப்பட்டது.
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான புகைப்படமானது அடையாளங்கள் மறைக்கப்பட்டு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளதால், குறித்த பெண்கள் யார் யார் என உறுதி செய்யப்படாமல் உள்ளது.

ஹாக்கிங் குடும்பத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், மோட்டார் நியூரான் நோயால் மிக நீண்ட காலம் பாதிக்கப்பட்டிருந்த போதும், பேராசிரியர் ஹாக்கிங் 20 ஆம் நூற்றாண்டில் இயற்பியலுக்கு மிகச் சிறந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
அவரது தரப்பில் பொருத்தமற்ற நடத்தை பற்றிய எந்தவொரு மறைமுகமான குற்றச்சாட்டும் தவறானது மற்றும் கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளனர்.
மார்ச் 2006 இல் எப்ஸ்டீன் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட 21 சர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஹாக்கிங்கும் ஒருவர். இந்த நிகழ்வின் 5 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக எப்ஸ்டீன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |