55 மாதங்கள் கொண்ட HDFC FD திட்டம்.., ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்?
55 மாதங்கள் கொண்ட HDFC வங்கி FD திட்டத்தில் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
HDFC Bank 55 month FD
சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்கள் (FD) வங்கிகளால் நடத்தப்படும் பல பாரம்பரிய FDகளைப் போலவே கால வைப்புத் திட்டங்களாகும். அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானவை மட்டுமே.
மேலும், பெரும்பாலும் ஒரே வங்கியின் பாரம்பரிய FDகளுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் வட்டி.., Post Office -ன் முக்கியமான திட்டம் பற்றி தெரியுமா?
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். அதேபோல, FD முடிந்தவுடன் முதிர்வு பெறலாம்.
பல வங்கிகள் வெவ்வேறு பெயர்களில் ஒரே கால அளவுக்கான சிறப்பு FDகளை வைத்துள்ளன. அத்தகைய FDகளின் வட்டி விகிதங்கள் மாறுபடலாம்.
HDFC வங்கி 55 மாத நிலையான வைப்புத் திட்டத்தில் அதன் அனைத்து FDக்களிலும் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
55 மாதங்கள் கொண்ட HDFC வங்கி FD திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.40 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
ரூ.6 லட்சம் முதலீடு
* 55 மாதங்கள் கொண்ட HDFC வங்கி FD திட்டத்தில் பொதுகுடிமக்கள் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.2,39,660.12 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.8,39,660.12 கிடைக்கும்.
* இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.2,58,755.12 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.8,58,755.12 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |