ராஜீவ் காந்தி கொலை வழக்கு... தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் இவருக்கே உள்ளது! ஆளுநர் தரப்பு விளக்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் இருக்கும் தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உள்ளதாக, ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று இன்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து ஆளுநர் தரப்பு கூறுகையில், 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 25-ஆம் திகதி இந்த உத்தரவை ஆளுநர் தரப்பு மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதற்குபிறகுதான் முதல்வர் பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
