ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வந்துள்ளார்: விஜயை விமர்சித்த அண்ணாமலை
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவை விமர்சித்த நிலையில் அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை பேசியது
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "களத்தில் நின்று தினமும் போராடுவதே அரசியல். கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வருவது ஒரு அரசியல்.
எத்தனை முறை வெளியில் வருகிறார் என்று மக்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மைக் பிடித்து கையை அசைத்து விட்டு செல்வது அரசியல் கிடையாது. களத்தில் நின்று அரசியல் செய்ய வேண்டும்.
சக்திவாய்ந்த நபர்களை பேசினால் தான் விஜய்க்கு மைலேஜ் கிடைக்கும். ராகுல் காந்தி குறித்து பேசினால் மைலேஜ் கிடைக்குமா?
அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி குறித்து விஜய் பேசுகிறார். குருவி படத்தின் மூலம் ரெட் ஜெயண்ட் மூவிஸ்-க்கு திறப்பு விழா நடத்தியதே விஜய் தான் .
லொட்டரி பணத்தை வைத்து திமுகவில் வேலை பார்த்த ஒருவர் விசிகவுக்கு சென்றார். இப்போது தமிழக வெற்றி கழகத்திற்கு தாவியுள்ளார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |