கிராமம் TO தொழிலதிபர்! கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வட மாநிலத்தவர்: வருமானம் எவ்வளவு தெரியுமா?
கிராமத்தில் பிறந்த ஒருவர் தற்போது பெரிய தொழிலதிபராக மாறி வெளிநாடுகள் வரை பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் தர்லாப் ராவத் (Durlabh Rawat). இவரது குடும்பம் வறுமையில் இருந்தாலும் கல்லூரி படிப்பை டெல்லி கல்லூரியில் படித்தார். பின்னர், Mahindra உள்ளிட்ட வாகன நிறுவனங்களில் பணியாற்றினார்.
ரூ.6,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த இவர் 12 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் வரை சம்பளம் பெற்றார். இவருக்கு, நல்ல சம்பளம் வாங்கினாலும் சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
பின்னர், ஒரு நாள் தனது வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சொந்த ஊருக்கு சென்று மாட்டு பண்ணை வைத்தார். பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதே இவருடைய நோக்கமாக இருந்தது.
பரோஸி (barosi)
இவர் சிறுவயதில் இருக்கும் போது இவருடைய அம்மா விறகு அடுப்பில் பால் காய வைத்து கொடுப்பதை நினைவுகூறும் வகையில் பரோஸி (barosi) என்ற பெயரை தனது நிறுவனத்திற்கு வைத்தார். பரோஸி என்றால் விறகு அடுப்பில் பானையில் பாலை ஊற்றி சூடு செய்வது என்று அர்த்தமாகும்.
கடந்த 2016 -ம் ஆண்டு 50 மாடுகளை வைத்து பண்ணையை உருவாக்கி barosi நிறுவனத்தை தொடங்கினார். ஆனால், இவர் நினைத்தபடி தொழில் செல்லவில்லை. சேமித்து வைத்த பணம் எல்லாம் குறைய தொடங்கியது.
இதனால், குர்குவானில் நேரடியாக சென்று பால் விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்தார். அப்போது, பால் மட்டுமின்றி வெண்ணெய் மற்றும் நெய் பொருட்களும் உயர்ந்தது.
இதனைத்தொடர்ந்து, E-Commerce மூலம் Amazon, Flipkart தளத்தில் barosi பொருட்கள் கிடைக்கும்படி செய்தார். இதனால் இவரது பொருட்களின் விற்பனையும் உயர்ந்தது. தற்போது, அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பரோஸி (barosi) நிறுவனத்தின் ஓராண்டு வருமானமே தற்போது ரூ.8 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |