சீமானின் இந்த தைரியத்திற்கு இவர் தான் காரணமாம்! தனித்து போட்டியிடுவது குறித்து அவரே கொடுத்த விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், தனித்து போட்டியிடும் தைரியம் எப்படி தனக்கு வந்தது என்பது குறித்து கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. ஒரு சிறிய கட்சி ஆரம்பித்தவர்கள் கூட, எந்த கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்ற விவாதத்தில் உள்ளன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களை நாம் தமிழர் கட்சி தனி ஒருவனாகவே நின்று போட்டியிட்டு வருகிறது.
அதற்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
அந்த வகையில், இந்த முறையும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுகிறது.
இப்படி தனித்து போட்டியிடும் தைரியம் உங்களுக்கு எப்படி வந்தது என்பது குறித்து பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.
அதில், ஈழத்தில் தமிழ் மக்களுக்காகப் பல்வேறு அமைப்புகள் போராடிய நிலையில், அந்த அமைப்புகளில் இணைந்து செயலாற்றாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை 22 வயதில் கட்டமைத்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் எனது தேசியத் தலைவர் பிரபாகரன்.
எங்கு நேர்மை இருக்கிறதோ அதை மக்கள் தன்னெழுச்சியாக ஆதரிப்பார்கள் என்பது அவரது சிந்தனை.
அவரது சிந்தனையில் ஊறிப்போன எங்களுக்கு நேர்மைதான் இலக்கு. அதுதான் இந்த துணிச்சலுக்கு காரண்ம என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த முறை தேர்தலில், நாம் தமிழர் கட்சி 15 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறும் என்றும், அந்த நம்பிக்கையை மக்கள் கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
