எங்களுக்கு ஒரே மகன், காலையில் தான் வீடியோ காலில் பேசினான்: உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் பெற்றோர் உருக்கம்
காலையில் தான் எங்களுடன் வீடியோ காலில் பேசினான் என்று பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் உருக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளம் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக்(23) மரணம் அடைந்தார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவருடைய தந்தை ஸ்ரீராம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பிழைப்பு தேடி மும்பை சென்று விட்டார். இவருக்கு முரளி ஒரே மகன் ஆவார். அக்னிவீர் திட்டத்தின் கீழ் முரளி ராணுவத்தில் சேர்ந்திருந்தார்.
மகனின் மரணம் குறித்து தந்தை கூறுகையில், "'வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வேலை முடித்து வந்த பின்னர் என் மகன் வீடியோ காலில் பேசினான். பின்னர் மீண்டும் மாலை 3 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்போது தான் நாங்கள் கடைசியாக அவரது முகத்தை பார்த்தோம். நாட்டைப் பாதுகாக்க எங்களது ஒரே மகன் வீரமரணம் அடைந்திருப்பது பெருமை தான். ஆனாலும், எங்களுக்கு அவன் ஒரே மகன் ஆவார்" என்றார்.
இதில் முரளியின் தந்தை ஸ்ரீராம் கூலி வேலையும், அவரது தாயார் ஜோதி வீட்டு வேலையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு முரளியின் உடல் கொண்டு வரப்பட இருப்பதால் அவரது பெற்றோர்கள் அங்கு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |