சசிகலாவின் அதிரடி முடிவுக்கு இவர் தான் முக்கிய காரணம்! அவரின் தம்பி திவாகரன் உடைத்த உண்மை
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா முடிவெடுத்ததற்கு யார் காரணம் என்பதை அவரின் தம்பி திவாகரன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் 6ம் திகதி சட்டமன்றத் தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில்தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா அதிரடியாக அறிவித்தார்.
இது குறித்து சசிகலாவின் தம்பி திவாகரன் அளித்த பேட்டியில், சசிகலா ஒரு வீராங்கனை. சரியான நேரத்தில் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன்.
இதற்கு காரணம் அவரை துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள்.
அவரைச் சுற்றியுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரால்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம்.
டிடிலி தினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தினகரன் பேசியது இணைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்திருக்கும்.
இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அவர்களின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும் என திவாகரன் கூறினார்.