அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை
டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவிற்காகப் பெறுவதில் வெற்றி பெற்றால், அது உலகின் முடிவுக்கு வழிவகுக்கும் என்று உயர்மட்ட ரஷ்ய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
போரைத் தவிர்ப்பதற்காக
கிரீன்லாந்தின் எதிர்காலம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் டென்மார்க்குக்கும் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

டென்மார்க்கின் பகுதி தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற தேவையை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு என்பதை அவர் காரணங்களாகவும் குறிப்பிடுகிறார்.
கிரீன்லாந்து மக்களில் சுமார் 85 சதவீதம் பேர்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை எதிர்த்தபோதிலும், அந்தத் தீவை எப்படியாவது கைப்பற்ற முயற்சிப்போம் என்று வெள்ளை மாளிகை நிர்வாகம் அழுத்தமாக கூறி வருகிறது.
ஆனால், தனது கோரிக்கைகளை நியாயப்படுத்திப் பேசி வரும் ட்ரம்ப், தான் கிரீன்லாந்தை கையகப்படுத்தாவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதைச் செய்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது, விளாடிமிர் புடின் அரசாங்கத்தில் உள்ள ஒரு உயர்மட்ட ரஷ்ய அதிகாரி, ஒரு முழுமையான மூன்றாம் உலகப் போரைத் தவிர்ப்பதற்காக ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளை தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் துணைப் பிரதமராக முன்பு பொறுப்பு வகித்துள்ள Dmitry Rogozin என்பவரே கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்பிற்கு எதிராக பேசியுள்ளார்.
அமெரிக்காவின் கோல்டன் டோம் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு பற்றிய பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், கிரீன்லாந்து அமெரிக்காவின் வசம் இருப்பது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார்.

மேலும், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை, விண்வெளி, செயற்கை நுண்ணறிவு ஆகியவை ஒரே அமைப்பாக இணையும் கோல்டன் டோம் அமைப்பில் கிரீன்லாந்தை இணைப்பதாகும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அழிவின் தொடக்கமாக இருக்கும்
மேலும், கிரீன்லாந்த் அமைந்துள்ள நிலை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும் என்றும் Dmitry Rogozin விளக்கமளித்துள்ளார்.
மேலும், ட்ரம்ப் தன்னிச்சையான முறையில் செயல்படவில்லை, மாறாக நேட்டோ கூட்டாளிகளைப் பொருட்படுத்தாமல், தனக்காகப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக பென்டகனின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி வருகிறார்.

இது, 1945 முதல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து வந்த, உலகில் உள்ள மூலோபாய ஸ்திரத்தன்மை அமைப்பையே சிதைப்பதாகும்.
ட்ரம்ப்பின் தலைமையின் கீழ் இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா மீது அனைத்து விதமான அணுசக்தி மேலாதிக்கத்திலும் தனக்கே மேலோங்கிய நிலை இருப்பதாக நினைக்கக்கூடும். ஆனால், இது உலக அழிவின் தொடக்கமாக இருக்கும் என்றே Dmitry Rogozin எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், பிரித்தானியாவும் மற்ற ஐரோப்பிய நட்பு நாடுகளும், கிரீன்லாந்தை ஒரு உண்மையான நேட்டோ மையமாகப் பாதுகாத்து உறுதிப்படுத்துவதன் மூலம், ட்ரம்பின் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய இந்த நடவடிக்கையைத் தடுக்க தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |