கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தலையில்லாத உடல்: அதிரவைத்த ஒரு சம்பவம்
ஸ்பெயின் நாட்டிலுள்ள கடற்கரை ஒன்றில், குழந்தை ஒன்றின் தலையில்லாத உடல் ஒன்று கண்டெடுக்கப்பட நிலையில், அந்த உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சில தகவல்களைக் கூறியுள்ளார்கள்.
கடற்கரையில் கிடந்த குழந்தையின் உடல்
நேற்று முன் தினம், துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பொலிசாருக்கு அளித்த தகவலைத் தொடர்ந்து, ஸ்பெயினிலுள்ள Roda de Bera என்னும் பகுதியிலுள்ள கடற்கரைக்கு பொலிசார் விரைந்தனர்.
Credit: Solarpix
அங்கு குழந்தை ஒன்றில் தலையில்லாத உடல் கிடக்கவே, உடனடியாக அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, அந்த இடம் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விடயம் என்னவென்றால், அந்த உடலை முன்பே சிலர் கண்டுள்ளனர். ஆனால், அவர்கள் அது ஒரு பொம்மை என்று நினைத்திருக்கிறார்கள்.
உடற்கூறு ஆய்வில் தெரியவந்த தகவல்கள்
அந்த உடலைக் கைப்பற்றிய மருத்துவர்கள் அதற்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உடற்கூறு ஆய்வில், அது ஒரு ஆறு மாதக் குழந்தை அல்லது அதைவிட வயது குறைந்த குழந்தை என தெரியவந்தது.
மேலும், அந்த குழந்தையின் உடல், 15 நாட்கள் முதல் இரண்டு மாதங்கள் தண்ணீரிலேயே கிடந்திருக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Credit: Solarpix
குழந்தையின் தலை மற்றும் உடலின் மேல் பகுதியும் கிடைக்காததால், அது தவறுதலாக உயிரிழந்ததா அல்லது கொல்லப்பட்டதா என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.
இதற்கிடையில், Roda de Bera மேயரான Pere Virgili, அந்த உடல் கடலில் மூழ்கி உயிரிழந்த ஒரு அகதிக் குழந்தையின் உடலாகக்கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
Irish Examiner
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |