கல்லீரல் முதல் இரத்த சுத்திகரிப்பு வரை இந்த ஒரு இலை போதும்: இப்படி யூஸ் பண்ணுங்க
கசப்பான உணவுகளில் எந்த அளவிற்கு கசப்பு தன்மை இருக்கிறதோ அந்த அளவுக்கு மருத்துவ குணங்களும் நிரம்பி இருக்கும்.
அந்தவகையில், நிலவேம்பு சிறப்பு மிக்க ஒரு மூலிகை ஆகும். இது நம் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
உடலில் பெரும்பாலான நோய்களின் மூல ஆதாரமாக நிலவேம்பு விளங்குகிறது.
நிலவேம்பில் கசாயம் செய்து குடித்து வருவதால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.
கிடைக்கும் நன்மைகள்
நிலவேம்பு கசாயம் அருந்தினால் இரத்தத்தில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கப்பட்டு சருமத்தில் தெரியும் அரிப்பு, சொரியாசிஸ், தடிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
நிலவேம்பு கசாயம் அருந்தினால் இரத்தத்தில் உள்ள அழுக்குகள் சுத்திகரிப்பு செய்யப்படும்.
நிலவேம்பு கசாயம் அருந்தினால் கல்லீரலில் புதிய செல்கள் உருவாகி கல்லீரல் பலப்படும். மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்யப்படும்.
நிலவேம்பு நம் உடலில் மெட்டபாலிச நடவடிக்கைகளை மேம்படுத்தும். இதனால் உடலில் சர்க்கரை துரிதமாக உறிஞ்சப்படுவது குறையும்.
நிலவேம்பு கசாயம் அருந்தினால் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் அழிக்கப்படும். இதனால் வாயு தொல்லை, வயிறு உப்புசம், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
நிலவேம்பு கசாயத்தில் உள்ள சாலிசிலிக் அமிலம் நம் ரத்தத்தில் ஊடுருவி தொற்றுகளை ஏற்படுத்துகின்ற கிருமிகளை அழிக்கும்.
சளி அல்லது காய்ச்சலால் அவதி அடைப்பவர்கள் நிலவேம்பு கசாயத்தை எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு கிடைக்கும்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நீண்டகால நோய்களுக்கும் நிலவேம்பு கசாயம் தீர்வு தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |