காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர்: கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.
இதனை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, அதில் உள்ள சத்துக்களால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் நீரை தினமும் காலையில் குடித்து வரும் போது, உடலினுள் ஏராளமான மாற்றங்கள் நிகழும்.
இந்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
கறிவேப்பிலை நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது.
மேலும், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கலோரிகளை எரிக்கும் செயல்முறையை வேகப்படுத்துகிறது.
உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது.
கறிவேப்பிலையில் உள்ள நார்ச்சத்து கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை சட்டென்று உயர்வதைத் தடுக்கும்.
மேலும் கறிவேப்பிலையில் உள்ள உட்பொருட்கள் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டியை ஊக்குவித்து, டைப்-2 சர்க்கரை நோயைப் பராமரிக்க உதவுகிறது.
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் முகப்பரு வருவதைக் குறைத்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவுகிறது.
முக்கியமாக கறிவேப்பிலை தலைமுடி உதிர்வதையும், முடி நரைப்பரையும் தடுக்க பெரிதும் உதவி புரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |