பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பாதாம் பிசின்- மருத்துவரின் கூற்று
Health benefits of eating badam pisin in tamil- பாதாம் மரத்தின் பட்டையில் இருந்து கிடைக்கும் பிசினை உலர வைத்து பாதாம் பிசின் தயாரிக்கப்படுகிறது.
பாதாம் பிசினில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
உடல் சூடு, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு பாதாம் பிசின் உதவக்கூடும்.

இந்நிலையில், மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாதாம் பிசினின் பயன்பாடுகள் குறித்து தெரிவித்துள்ளார்.
பாதாம் பிசினின் நன்மைகள்
மலச்சிக்கல்- பாதாம் பிசினில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க உதவக்கூடும்.
உடல் சூடு- கோடைக்காலத்தில் உடல் சூட்டை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியான உணர்வை வழங்கும் பொருளாக பாதாம் பிசின் பயன்படுத்தப்படுகிறது.
செரிமானம்- பாதாம் பிசினை மோருடன் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவக்கூடும். இதில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
எப்படி சாப்பிடலாம்?
5 கிராம் பாதாம் பிசினை இரவு ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அது ஜெல் போன்று மாறியிருக்கும்.
இதை தண்ணீருடன் கலந்து குடிக்கலாம் அல்லது சிறிதளவு தேன் சேர்த்தும் குடிக்கலாம்.
மேலும், ஊறவைத்த பாதாம் பிசினை மோர், எலுமிச்சை ஜூஸ் அல்லது சர்பத்திலும் சேர்த்து குடிக்கலாம்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் பாதாம் பிசினை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், சர்க்கரை நோயாளிகள் தேன் சேர்த்து தினமும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |