வீட்டில் அன்றாடம் சமைக்கும் தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.., என்னென்ன தெரியுமா?
தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசையை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
தோசையில் பிளைன் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை போன்ற பல வகை உண்டு.
அந்தவகையில், தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
தோசையில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
குடல் ஆரோக்கியம்: தோசை மாவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் இருப்பதால், எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. இதனால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்: தோசையில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மூலமாக விளங்குகிறது.
இரத்த ஓட்டத்தை பராமரிக்கும்: தோசையின் நொதித்தல் செயல்முறை, இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மையை அதிகரித்து ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கும்: தோசையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால் அதிகமாக உணவு உட்கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சர்க்கரை அளவை குறைக்கும்: தோசையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் நீடித்த ஆற்றலை வழங்கி, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |