அடிக்கடி உணவில் ஒரு கப் கொள்ளு.., கிடைக்கும் நன்மைகள் என்ன?
கொள்ளு புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு சத்தான பயறு வகை.
இது உடல் எடையைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பைக் கரைக்கவும் பெரிதும் உதவுகிறது.
மேலும், சளி இருமலை நீக்க, செரிமானத்தை மேம்படுத்த, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கொள்ளு ஒரு சிறந்த உணவாகும்.
அந்தவகையில், சத்தான இந்த கொள்ளு பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிடைக்கும் நன்மைகள் என்ன?
எடை குறைப்பு- கொள்ளு பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும்.
நோயெதிர்ப்பு சக்தி- இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. சளி, காய்ச்சல் காலங்களில் கொள்ளு சூப் பயனுள்ளதாகும்.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு- குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் காரணமாக, இரத்த சர்க்கரை திடீர் உயர்வை தடுக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
செரிமானம் மேம்பாடு- நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்- கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறுநீரக கற்கள் தடுப்பு- சிறுநீர்ப்பெருக்கியாக செயல்பட்டு, நச்சுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
கல்லீரல் சுத்தம்- நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எலும்பு வலிமை- கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்ததால், எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |