தினமும் காலையில் ஜாக்கிங் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
Asthma
Back Pain
Cholera
Weight Loss
Exercises
By Kishanthini
பொதுவாக தினமும் காலையில் ஜாக்கிங் செய்வது வாக்கிங் செல்வதை விட நல்லது என்று கூறப்படுகின்றது.
இதனால் அதிகப்படியான கலோரியை மிகக் குறைந்த நேரத்தில் எரிக்க முடியும்.
அதுமட்டுமின்றி இதனால் நேரம் மட்டும் அல்ல. நம்முடைய உடலில் உள்ள ஆற்றல்களும் கூட சேமிக்கப்படுகின்றன.
அந்த வகையில் வாக்கிங்கை விட ஜாக்கிங் செல்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- ஒரு மணி நேரம் ஜாக்கிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, கச்சிதமான உடல் தோற்றம் கிடைக்கிறது.
- நுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சினைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
- ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன. இது, ரத்த ஓட்டம் சீராகப் பாய வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது.
- உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது.
- ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
- கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசைநார்கள் வலிமை பெறுகின்றன.
- ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US