சீக்கிரம் வயதாகாமல் இருக்க இந்த ஒரே ஒரு கீரை சாப்பிட்டால் போதும்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பல கீரை வகைகள் உணவாக மட்டும் அல்லாமல் மருந்தாகவும் உள்ளன.
அந்த வகையில் பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் கீரைதான் இந்த கடுகுக்கீரை. இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
கொலஸ்ட்ரால், புற்றுநோய் மற்றும் வயது தோற்றத்தை குறைக்க தடுக்க கடுகுக்கீரை மிக முக்கியம் என பிரபல மருத்துவர் சின்மோய் தேவகுப்தா கூறியுள்ளார்.
கடுகுக்கீரை நன்மைகள்
கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த இந்த கடுகுக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு நோய்கள் அனைத்தும் விலகிவிடும்.
மேலும் இதில் உள்ள அதிகளவு வைட்டமின்கள் உள்ளன, இது கண்பார்வையை மேம்படுத்தவும், கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
குறிப்பாக இந்த கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது வயது தோற்றத்தை குறைக்க உதவுகிறது.
கடுகு கீரையில் இரண்டு வகையான குளுக்கோசினோலேட்டுகள் உள்ளன, அவை புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த கடுகு கீரை சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இந்த கீரையில் கலோரிகள் நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது தவிர, உடல் பலவீனம் மற்றும் இரத்த சோகையைப் போக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |