மருத்துவ குணம் நிறைந்த மாதுளை பழம்
மாதுளை பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், மற்றும் தாதுக்களால் நிறைந்தது.
இந்த பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, அழற்சியைக் கட்டுப்படுத்துகிறது, மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
மேலும், மாதுளையில் உள்ள புனிகலஜின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நுரையீரல் பாதிப்புகளைத் தடுக்கிறது.
இதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் எலும்புகள் மற்றும் திசுக்களில் ஏற்படும் சேதத்தைக் குறைத்து, மூட்டுக்களில் ஏற்படும் அழற்சி பிரச்சனைகளை தடுக்கிறது.
மாதுளையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்பு ஆபத்தான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஈஸ்ட் தொற்றுகளை தடுக்கிறது.
மாதுளையில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான நார்ச்சத்துக்கள் உள்ளன.
குறிப்பாக மாதுளை முக பளபளப்பை அதிகரிக்கவும், முகப்பரு, கரும்புள்ளிகளை நீக்கவும், சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |