தினமும் இந்த பழம் சாப்பிட்டால் இதய நோய் வராது! மாரடைப்புக்கு குட் பை சொல்லலாம்
சப்போட்டா பழம் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட!
தினந்தோறும் இரண்டு சப்போட்டா பழங்களை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் நீங்கும், இதயம் பலமாகி அது சம்மந்தமான நோய்கள் வருவது தடுக்கப்படும்.
ஆரம்பநிலை காசநோய் குணமடைய காச நோயினால் பாதிக்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே தினம்தோறும் சப்போட்டா பழ சாருடன், ஒரு நேந்திரன் பழமும் சாப்பிட்டு வந்தால் காச நோய் சில நாட்களில் குணமடையும்.
சீதபேதி குணமாக உடல் உஷ்ணம் ஏற்படும் சமயத்தில் ரத்தத்துடன் கலந்த பேதி உண்டாகும். இதனை சரிசெய்ய சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து பருகி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் உடல் உஷ்ணமானது குறைந்து சீதபேதி நிற்கும்.
இரவில் தூக்கம் வராமல் தவிப்போர், தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் சப்போட்டா சாறினை குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
இரத்த மூலம் உள்ளிட்ட மூல நோய்களை சரி செய்யும் இயற்கை மருந்தாக இப்பழம் கருதப்படுகிறது.
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ள காரணத்தினால், எலும்புகளை சப்போட்டா பழம் வலுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்த இப்பழம் வயதான காலத்திலும் கண் பார்வையினை மேம்படுத்துகிறது.