சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இந்த ஒரு டீ போதும்: ஆய்வுகளின் கூற்று
சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க கிராம்பு டீ பெரிதளவில் உதவுகின்றது.
கிராம்பு டீ வெறும் மூலிகை டீ மட்டுமல்ல. இதில் நமக்கு தெரியாத பல மருத்துவ குணங்கள் உள்ளன.
உணவு சாப்பிட்ட பிறகு ஏன் கிராம்பு டீயை குடிக்க வேண்டும் என்பதற்க்கான 6 காரணங்களை பற்றி காணலாம்.
கிராம்பு டீ குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்
கிராம்பு டீயில் நமது செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் நிறையவே உள்ளது. கிராம்பு டீயை வெதுவெதுப்பாக குடிக்கும் போது நமது செரிமானத்திற்கு உதவி செய்கிறது. சாப்பிட்ட பிறகு ஏற்படும் அசௌகர்யத்தையும் கிராம்பு டீ குறைக்க உதவுகிறது.
கிராம்பில் இயற்கையாகவே உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நமது சுவாசத்தை புத்துணர்ச்சி ஆக்குகின்றன. கிராம்பு டீயை குடிப்பதால் சாப்பிட்ட பிறகு வரக்கூடிய சுவாச துர்நாற்றம் நீங்குகிறது.
செரிமானப் பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க கிராம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகிறது. அதனால், சாப்பிட்ட பிறகு, கிராம்பு டீயை குடித்தால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கிராம்பை வாயில் போட்டு மெல்லுவதால் சிறந்த முறையில் இன்சுலினை பராமரிக்க முடியும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. சூடான கிராம்பு டீயை குடிப்பதால் நீடித்த ஆற்றல் ரத்த ஓட்டத்தில் சேர்கிறது. இதனால் திடீரென ரத்த சர்க்கரை அளவு ஏறாமல் பராமரிக்க முடிகிறது.
கிராம்பு டீயின் சுவை நமது கவலை, பதட்டம், மன அழுத்தம் போன்றவை பறந்து போகிறது.
கிராம்பில் வைட்டமின் மற்றும் மினரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின்-சி நிறையவே உள்ளது. சாப்பிட்ட பின் கிராம்பு டீயை குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டசத்துகள் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |