வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில் நாம் தூங்க வேண்டும்.., ஏன் தெரியுமா?
அன்றாட வாழ்க்கையில் இரவு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரத்தில் வேலை செய்வது, இரவில் தாமதமாக தூங்குவது என வாழ்கின்றனர்.
நம்மில் பலரும் வெளிச்சத்தில் தூங்குவதை விரும்புவதில்லை. அதேபோல், இரவு நேர தூக்கமின்மை காரணமாக உடல், மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
அந்தவகையில், வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில் ஏன் தூங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
விளக்குகளை ஏற்றிக் கொண்டு தூங்குவதால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் ஆழ்ந்த உறக்க நிலைகளில் நுழைவது கடினமாக இருக்கும்.
இருண்ட சூழலில் தூங்குவது மெலடோனின் உற்பத்தி அதிகரிப்பது முதல் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்நிலையில் பகல் இரவாக மாறும் போது, நம் உடல்கள் இயற்கையாகவே மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஹார்மோன் ஆனது உடலுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்ற சமிக்ஞையை அளிக்கிறது.
எனினும், விளக்குகளை வைத்து தூங்குவது இந்த மெலடோனின் உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.
மேலும் இரவு நேரத்தில், மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல ஒளி, பகல்நேரம் என சமிக்ஞைகளை அளித்து மூளையை ஏமாற்றலாம்.
இருண்ட அறையில் தூங்குவது பதட்டம், மனச்சோர்வு போன்ற பல்வேறு மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
நாம் முழு இருளில் தூங்கும் போது, நம் மூளையை நன்றாக ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.
மேலும், இருட்டில் தூங்குவது கவனத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கண் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
கூடுதலாக, இருட்டில் தூங்குபவர்கள் உயர் தரமான தூக்கத்தை அனுபவிப்பதுடன், அதிக புத்துணர்ச்சியுடன் காணப்படுவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |