தினமும் சப்பாத்தி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் வந்தடையுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சப்பாத்தி பல வீடுகளில் கட்டாய இரவு உணவாக இருக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சப்பாத்தியை உண்ணவேண்டும் என்று மருத்துவர்களும் ஆலோசனை வழங்குகிறார்கள்.
அந்தவகையில் தினமும் சப்பாத்தி உண்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் வந்தடைகின்றன.என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
உடலுக்கு தேவையான வைட்டமின் B, E மினரல்கள், காப்பர், ஸிங்க், ஐயோடின், சிலிகான், பொட்டாசியம் மற்றும் கால்சியம் மற்றும் இதர மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கியிருக்கின்றன.
சப்பாத்தியில் உள்ள ஸிங்க் மற்றும் இதர மினரல் சத்துகள் சருமத்திற்குப் பளபளப்பை அளிக்கும்.
கோதுமையில் கார்போ ஹைட்ரேட் நிறைந்துள்ளதால் நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது. மேலும் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள் பட்ட வியாதிகளால் அவஸ்தைப்படுவோருக்கு சப்பாத்திதான் சிறந்த டயட் உணவு. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் நோய்த் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
சப்பாத்தியில் இரும்புசத்து அதிகமாக இருப்பதால் உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கும்.
இது மற்ற உணவுகளோடு ஒப்பிடும்பொழுது கலோரி மிக மிகக் குறைவு. இதனால் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்போர் சப்பாத்தியை உண்ணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |