பாடசாலை சிறார்களுக்கு ஏற்படும் புதிய வகை நோய் - எச்சரிக்கை விடுத்த சுகாதார துறை
இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை காரணமாக புதிய நோய் ஏற்படவுள்ளதாக சுகாதார துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுத்த சுகாதார துறை
இலங்கையின் பல பகுதியில் கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களின் உடலால் உணரப்படும் வெப்பநிலையானது வழமையயை விட அதிகமானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் சன்ன டி சில்வா பாடசாலை மாணவர்களுக்கு எச்சரித்துள்ளார்.
குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் வெப்ப பக்கவாதம் அல்லது வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை தவிர்ப்பதற்காக முடிந்த வரை தண்ணீரைக் குடிப்பது மற்றும் வலுவான சூரிய ஒளியில் நேரடியாக நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |