சுவிஸில் அமோகமாக விற்பனையாகும் போலி கொரோனா சான்றிதழ்
சுவிட்சர்லாந்தில் போலி கொரோனா சான்றிதழ் விற்பனை தொடர்பில் பொலிசார் துரித நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில் பரவலாக கொரோனா போலி சான்றிதழ் விற்பனை தொடர்பில் பொலிசார் நால்வரை கைது செய்துள்ளனர்.
வாட் மாநிலத்தில் பார்மசி ஊழியர்கள் அறிமுகமானவர்கள் மற்றும் உறவினர்களுக்காக சான்றிதழ்களை வழங்கியுள்ளனர், சில நேரங்களில் அறிமுகமானவர்கள் அல்லது உறவினர்கள் முன் சோதனை அல்லது தடுப்பூசி இல்லாமல் கட்டணத்திற்கும் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.
பொலிசார் முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில் வாட் மாநிலத்தில் மட்டும் 100 பேர்களுக்கு கொரோனா போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத செயலானது பிழை விதிக்கப்படவும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறித்த போலி சான்றிதழ்களை வழங்கிய நபர்கள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், தற்போது கைதாகியுள்ள நால்வர் மீதும் உரிய நடவடிக்கை பாயும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜெனீவாவில் 200 போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
400 பிராங்குகள் கட்டணத்தில் போலி சான்றிதழ் வழங்கியுள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.