RR மேலாளர் போன் பயன்படுத்தியது ஏன்? வெளியான உருக்கமான காரணம்
RR மேலாளர் டக் அவுட் பகுதியில் போன் பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
செல்போன் பயன்படுத்திய RR மேலாளர்
2026 ஐபிஎல் தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
கடந்த வெள்ளிக்கிழமை கௌஹாத்தியில் நடைபெற்ற RCB அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மேலாளர் ரோமி பிந்தர் டக் அவுட்(Dug Out) பகுதியில் அமர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருந்தார்.

அவரின் அருகே அமர்ந்திருந்த வைபவ் சூர்யவன்ஷியும் செல்போன் திரையை பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்த காட்சிகள் மைதானத்தில் இருந்த கேமரா மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விதிமீறலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மைதானம் அருகே உள்ள டக் அவுட் பகுதியில் வீரர்கள் மற்றும் அணியை சேர்ந்தவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளே வரும் போது, செல்போனை அணைத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கி விட வேண்டும்.
போன் பயன்படுத்திய ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தரிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மருத்துவ காரணம்
ரோமி மருத்துவ காரணங்களாலே செல்போனை உடன் வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இரண்டு சிறுநீரகமும் செயலிந்த காரணத்தால் சுமார் ஒரு மாதம் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுள்ளார்.
மேலும், ஆஸ்துமா காரணமாக 10 கிலோ உடல் எடை குறைந்துள்ளார். அவர் நீண்ட தூரம் மாடிப்படி ஏறவோ இறங்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதனால் மருத்துவ காரணங்களுக்காகவே செல்போனை உடன் வைத்திருந்ததாக ரோமி பிந்தர் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |