அவரா இது? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கிம் ஜாங் உன்! தீயாய் பரவும் புகைப்படம்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நேற்று இராணுவ அணிவகுப்பில் கலந்துக்கொண்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய சர்வாதிகார ஆட்சி. பின் அவருடைய கொழு கொழு கன்னமும் உடல் பருமனும் தான்.
கடந்த 2011-ம் ஆண்டு அதிபராக பதவியேற்றது முதல், கிம் ஜாங் உன் உடல் எடை, தொடர்ந்து அதிகரித்து வந்தது. உடல் பருமன் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில் கிம் ஜான் உன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதில், கிம் ஜாங் உன் உடல் மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்டார், உடல் நலக்குறைவு காரணமாக எடை குறைந்திருக்கலாம் என்று கருத்துக்கள் பரவின.
எனினும், இந்த யூகங்களை முற்றிலுமாக மறுத்த வட கொரிய அரசு நடத்தும் ஊடகம், தலைவர் உடல் எடையை குறைத்து விட்டார் என்று விளக்கமளித்தது.
இந்நிலையில், நேற்று இரவு நடந்த இராணுவ அணிவகுப்பில் கலந்துக்கொண்ட கிம் ஜாங் உன், எடையை குறைத்து ஸ்லிம்மாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தோன்றினார்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கிம் ஜாங் உன் ஸ்லிம்மாக தோன்றிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
It's striking how much healthier Kim Jong Un is looking in these photos from yesterday. However he is doing it -- and there are theories -- he looks a lot better than he did a few months ago. pic.twitter.com/DKqCOFSBF8
— Martyn Williams (@martyn_williams) September 9, 2021
கிம் ஜாங் உன் உடல்நலம் குறித்து தொடர்ந்து வதந்தி கிளப்பி வந்தவர்களுக்கு இனி வேலையின்றி ஆக்கிவிட்டார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.