புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை.., எப்படி செய்வது?
பச்சை பயிறு உடலிற்கு ஒரு ஆரோக்கியமான தானியம் ஆகும். இது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
முளைகட்டிய பச்சைப்பயறு அதிக புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களைக் கொண்ட ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாகும்.
இது உடல் எடையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், சத்தான முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு- 1 கப்
- பச்சரிசி- 50g
- பச்சை மிளகாய்- 4
- இஞ்சி- 1 துண்டு
- கல் உப்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்
- நெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் பச்சைப்பயிரில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவிட்டு பின்பு தண்ணீரை வடிகட்டி பயிரை துணியில் கட்டி இரவு முழுக்க வைக்கவும்.
அடுத்து பச்சரிசியை நினைக்க கழுவி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் ஊறவைத்த பச்சை பயறு சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின்பு மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
இதற்கடுத்து தோசைக்கல்லில் கலந்த மாவை ஊற்றி நெய் சேர்த்து தோசை வெந்ததும் எடுத்தால் சத்தான முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |