பளபளப்பான சருமத்திற்கு...! இதோ உங்களுக்கான Detox Drink
தனது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று தான் அனைவருக்கும் ஆசை.
ஆகவே சிலர் க்றீம்களை வாங்கி பயன்படுத்துகின்றார்கள். அதன் காரணமாக முகத்தில் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளையும் சந்திக்கின்றனர்.
சிலர் யோகா, உடற்பயிற்சி மற்றும் நீச்சல் செய்வதன் மூலம் தனது உடலில் உள்ள அழுக்குகளை வியர்வை மூலமாக நீக்கி முகத்தையும் பொலிவாக வைத்திருப்பார்கள்.
இந்த செயற்பாடுகளில் ஈடுப்படாதவர்கள் எவ்வாறு தனது முகத்தை பொலிப்பெற செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.
இவ்வாறு இருக்கையில் சில பானங்களை குடித்து முகத்தை எவ்வாறு பொலிவுப்பெற செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
பச்சை பானம்
பச்சை பானம் என்றாலே அனைவரும் கசப்பு என்று யோசித்து அதை குடிக்க மாட்டார்கள். ஆனால் நமது உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெற பச்சை நிற உணவுகளை சாப்பிட்டாலே போதும்.
பச்சை பானத்தை தயாரிக்க முதலில், கீரை வகை, வெள்ளரிக்காய், பச்சை ஆப்பிள், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை வடிக்கட்டி ஜூஸை மற்றும் தனியாக எடுத்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.
மாதுளை பானம்
மாதுளை என்பது முகத்தினை பராமறிக்க மிகவம் உகந்த பொருளாகும். மாதுளையுடன் எதையும் சேர்க்காமல் அதை இலகுவாக ஜூஸ் செய்து குடித்தாலே காணும்.
முகத்தில் சுருக்கங்கள் நீங்கி பொலிவுடன் இருக்கலாம்.
தர்பூசணி பானம்
தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் துளசி சேர்த்து குடித்தால் வெயிலில் இருந்து முகத்தை பாதுகாக்கும். இது முகத்தை மட்டுமின்றி உடலையும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
மஞ்சள் பானம்
மஞ்சள் கிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து அவித்து எடுக்க வேண்டும்.
தண்ணீருடன் மஞ்சள் கலந்தவுடன், அந்த தண்ணீர சிறுது நேரம் ஆறவிட்டு அதில் தேன் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறி உடல் பொலிவடையும்.
மேலும் இந்த பானத்தை குடிப்பதால் உடல் ரீதியாக வேறு என்ன பலன்கள் கிடைக்கின்றது என்று தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.