முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சத்தான லட்டு.., இலகுவாக செய்வது எப்படி?
உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால் முடி உதிர்வு மற்றும் ஆரோக்கியமற்ற முடி உருவாக காரணமாகுகிறது.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க சத்துக்கள் நிறைந்த இந்த லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை- ½ கப்
- நெய்- ½ கப்
- ராகி மாவு- ½ கப்
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வாணலில் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தோலுரித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் வாணலில் நெய் ஊற்றி ராகி மாவை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கம்பி பதம் வரும் வரை பாகுகாய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து தோலுரித்த வேர்க்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள ராகி மாவு, வெல்லப்பாகு, வேர்க்கடலை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து லட்டுவாக பிடித்து வைத்தல் ஆரோக்கியமான லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |