உடலிற்கு வலு சேர்க்கும் சுவையான லட்டு.., இலகுவாக செய்வது எப்படி?
ஆரோக்கியமான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
அந்தவகையில், இந்த சுவையான லட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை- ½ கப்
- பச்சை பயிறு- 1 கப்
- ஏலக்காய்- 4
- வெல்லம்- 2 கப்
- நெய்- ¼ கப்
- வெள்ளை எள்ளு- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் பச்சை பயிறு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்த வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஆறவைத்த பச்சைப்பயிறு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்து சலித்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த வேர்க்கடலை, பச்சைப்பயிறு பொடி சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து அரைத்த மாவுடன் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து அதில் எள்ளு மற்றும் உருகிய நெய் சேர்த்து லட்டுவாக பிடித்து எடுத்தால் சுவையான லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |