உடலுக்கு சத்தான பாரம்பரிய அரிசி லட்டு.., எப்படி செய்வது?
தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான சுவை மற்றும் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல், மற்றும் உடல் எடையை நிர்வகித்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய அரிசி லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு கவுனி அரிசி- ½ கப்
- மாப்பிள்ளை சம்பா அரிசி- ½ கப்
- பூங்கார் அரிசி- ½ கப்
- காட்டுயானம் அரிசி- 1 கப்
- குள்ளகார் அரிசி- ½ கப்
- கருங்குறவை அரிசி- ½ கப்
- ஏலக்காய்- 2
- சுக்கு- 1 துண்டு
- பனங்கற்கண்டு- 1 கப்
- நெய்- 5 ஸ்பூன்
- பாதாம்- 10
- முந்திரி- 10
- திராட்சை- 10
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கருப்பு கவுனி அரிசியை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி, குள்ளகார் அரிசி மற்றும் கருங்குறவை அரிசியையும் இதேபோல் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து இவை அனைத்தையும் நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதில் பனங்கற்கண்டு, ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து அனைத்தையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலில் நெய் சேர்த்து சூடானதும் இதில் நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
இறுதியாக அரைத்த மாவுடன் வறுத்த பொருட்களை சேர்த்து அவ்வப்போது உருக்கிய நெய் சேர்த்து உருண்டையாக பிடித்தால் பாரம்பரிய அரிசி லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |