உடல் வலுவிற்கு சத்தான ராகி ஆப்பம்: எப்படி செய்வது?
ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
இந்த ராகியில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு அதிக அளவில் உள்ளது.
இத்தனை சத்து நிறைந்த ராகியை சுவையான ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு- 1 கப்
- சாதம்- ¼ கப்
- ஈஸ்ட்- ¼ ஸ்பூன்
- துருவிய தேங்காய்- ¾ கப்
- நாட்டுச்சர்க்கரை- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ராகி மாவை சலித்து, பின் அடுப்பில் வாணல் வைத்து மிதமான தீயில் ராகி மாவை வறுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
பின் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் ஆறவைத்த மா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலந்து 8 மணி நேரம் அப்படியே வைக்கவேண்டும்.
அதன் பின் மாவை நன்கு கலந்து ஆப்ப சட்டியில் ஊற்றி ஆப்பம் சுட்டு எடுத்தால் சுவையான ராகி ஆப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |