தித்திக்கும் சுவையில் குதிரைவாலி அரிசி பாயசம்: எப்படி செய்வது?
பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
பாயசம் சாப்பிடுவது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான குதிரைவாலி அரிசி பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- குதிரைவாலி அரிசி- 100g
- மில்க்மெய்ட்- ½ கப்
- பால் - 2 லிட்டர்
- சர்க்கரை- தேவையானஅளவு
- நெய் - 3 ஸ்பூன்
- முந்திரி - 10
- பாதாம் - 10
செய்முறை
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை தண்ணீரில் கழுவி எடுத்துகொள்ளவும்.
இப்போது அதே பாத்திரத்தில் காய வைத்த பாலை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் குதிரைவாலி அரிசியை வேக வைக்க வேண்டும்.
இதனையடுத்து அரிசி வெந்த பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
இந்த சர்க்கரை பாலுடன் கரைந்த பிறகு மில்க் மெய்டு சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது ஒரு சிறிய கடாயில் நெய் சேர்த்து உருகியதும் நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் பருப்பை பாயசத்தில் சேர்த்துக் கலக்கி இறக்கினால் சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |