நாவூறும் சுவையில் காரசாரமான மீன் வறுவல்: எப்படி செய்வது?
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மீன். மீன் பிடிக்காத ஒருவரை கூட பார்ப்பது அரிதான விஷயம்.
காலை, மதியம், இரவு என மூன்று நேரம் மீன் கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம்.
அந்தவகையில், சுவையான மொறுமொறு மீன் வறுவல் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீன்- ½kg
- தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
- சின்ன வெங்காயம்- 12
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 10 பற்கள்
- கறிவேப்பிலை- 4
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மிளகுத் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எலுமிச்சை பழம் - 1
செய்முறை
முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலக்கவும்.
அடுத்து இதில் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் பிரிட்ஜில் ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பின் மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுடச்சுட காரசாரமான மசாலா மீன் வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |