Instant Dosa: இந்த ஒரு மா இருந்தால் போதும்.., 5 நிமிடத்தில் தோசை செய்யலாம்
பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
தோசைக்கு மா அரைத்து அதனை புளிக்கவைத்து செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
அந்தவகையில், மா அரைக்காமலேயே 5 நிமிடத்தில் உடனடி மொறுமொறு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மா- 1 கப்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- கேரட்- 1
- சீரகம்- ½ ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- ¼ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் அரிசி மா மற்றும் 2½ கப் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட் சேர்த்து கலக்கவும்.
அடுத்து இதில் சீரகம், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் அதில் கரைத்த மாவை தோசை ஊற்றி எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்தால் மொறுமொறு தோசை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |