ஒரு கப் பாசி பருப்பு போதும்.., தித்திக்கும் பருப்பு பாயசம் செய்யலாம்
பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
பாயசம் சாப்பிடுவது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பாசி பருப்பு பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு- 1 கப்
- வெல்லம்- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் பால்- 4 கப்
- முந்திரி- 15
- உலர் திராட்சை- 8
- ஏலக்காய்- 4
செய்முறை
முதலில் ஒரு கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை அடுத்து அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான பருப்பு வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.
இப்போது பருப்பு நன்கு வெந்த பின், வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
இறுதியாக இதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறினால் சுவையான பாசிப்பருப்பு பாயசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |