ஒரே மாதத்தில் இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்
பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உடல் எடையை அதிகரிக்கும்.
அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் இடுப்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க எப்படி குறைப்பது என்று பார்க்கலாம்.
எவ்வாறு குறைப்பது?
சரியான உணவு: புரதம், நார்ச்சத்து, சர்க்கரை குறைவாக உள்ள உணவு, பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், கோழி, மீன் மற்றும் பருப்பு போன்ற குறைந்த கலோரி புரத மூலங்களைச் சேர்க்கவும். இந்த உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, கொழுப்பு சேர்வதைத் தடுக்க உதவும்.
கார்டியோ பயிற்சி- ரன்னிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது ஏரோபிக்ஸ் போன்ற கார்டியோ பயிற்சிகள் இடுப்பு கொழுப்பை எரிக்க உதவுகின்றன.
வலிமை பயிற்சி- எடை தூக்குதல், ஸ்குவாட்கள் மற்றும் குளுட் பிரிட்ஜ்கள் போன்ற பயிற்சிகள் இடுப்பு மற்றும் தொடைகளின் தசைகளை வலுப்படுத்த கொழுப்பை எரிக்க உதவுகிறது.
அதிகளவு தண்ணீர்- தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது, இது கொழுப்பை கரைக்க உதவுகிறது.
உணவு மெதுவாக மெல்லுதல்- இந்த செயல்முறை உணவு விரைவாக ஜீரணமாகுவதால், தொப்பை கொழுப்பையும் விரைவாகக் குறைக்கிறது.
கல்லீரல் டிடாக்ஸ் டீ- கல்லீரல் நச்சு நீக்கம் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி, தொப்பையைக் குறைக்க உதவுகிறது.
போதுமான தூக்கம்- போதுமான அளவு தூங்கினால் உங்கள் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும்.
அதிக புரதம்- புரதத்தை அதிகரளவு எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவாக பசி எடுக்காது, மேலும் இதன்மூலம் உணவு உட்கொள்ளல் குறையும்.
குறைந்த கார்போஹைட்ரேட்- அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் எடுத்துக்கொள்வதால் ஜீரணிக்க நேரம் எடுக்கும், இது கொழுப்பைக் குறைப்பதை கடினமாக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |