மாரடைப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
நாம் உயிர் வாழ இதயத்துடிப்பு மிகவும் அவசியம். இதயத் துடிப்பு நின்றால் வாழ்க்கையே இருக்காது. ஒருவரின் தவறான உணவுப் பழக்கத்தாலும், இதயத் தமனியில் கொழுப்பு அடைப்பு காரணமாகவும் மாரடைப்பு ஏற்படுகிறது.
இந்தக் காலக்கட்டதில் இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு வந்து இறக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது. கீழ் காணும் உணவு முறைகளை மேற்கொண்டால், இதய அடைப்பிலிருந்து தப்பித்துவிடலாம்.
சிட்ரஸ் பழங்கள்
இதய அடைப்பிலிருந்து நாம் தப்பிக்க நிறைய சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில் அதிகப்படியான சிட்ரஸ் காணப்படுகின்றன. இப்பழங்களில் உள்ள ஃபிளாவனாய்டுகள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவி செய்யும். இதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
வாதுமை பருப்பு
இதய அடைப்பிலிருந்து தப்பிக்க வாதுமை பருப்பை சாப்பிடலாம். இவற்றில் புரதம், நார்ச்சத்து எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வாதுமை பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஒமேகா இதய அடைப்பு வராமல் தடுக்கும்.
தக்காளி
இதய அடைப்பிலிருந்து தப்பிக்க தக்காளியை சாப்பிட்டு வரலாம். இவற்றில் உள்ள லைகோபீன் இதய அடைப்பிலிருந்து பாதுகாப்பும். இவை இதய தமனி தடிப்புத் தோல் அழற்சியின் அபாயத்தை குறைக்கும்.
பீட்ரூட்
இதய அடைப்பிலிருந்து தப்பிக்க பீட்ரூட்டை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வரலாம். பீட்ரூட்டில் நைட்ரைட்டின் உள்ளது. இவை ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தையும், அழற்சியையும் குறைக்கும். மேலும், இதய அடைப்பு அபாயத்தையும் குறைக்கும்.
பெர்ரி
இதய அடைப்பிலிருந்து தப்பிக்க ஸ்ட்ராபெரி முக்கிய பங்கு வகிக்கிறது. அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி, திராட்சைகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுவதால் இதய அடைப்பிலிருந்து பாதுகாக்க உதவி செய்கிறது. பெர்ரி உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியம் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |