ஆரஞ்சு ஜூஸ் அதிகமாக குடித்தால் இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்! ஜாக்கிரதையாக இருங்க
ஆரஞ்சு எல்லோருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்றாகும். இதன் புளிப்பு சுவையால் இதை அனைவரும் விரும்புவர். ஆரஞ்சு சாறு நமக்கு நோயெதிரிப்பு சக்தியை தருவதோடு நம் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இதிலுள்ள விட்டமின் சி நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது.
ஏனெனில் இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும். அந்தவகையில் என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
- எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், ஆரஞ்சு சாற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த சாறு தயாரிப்பில் அதிக சர்க்கரை கலக்கப்படுகிறது. இது கூடுதல் கலோரி வடிவில் உடலில் சேமிக்கப்படுகிறது.
- ஆரஞ்சு ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால் இது கொழுப்பை அதிகரிக்கிறது. இதனை குடிக்கும் போது மிக விரைவாக குடிக்கும் போது அதிக சர்க்கரை உடலுக்குள் செல்கிறது. உடலால் ஒரே நேரத்தில் அவ்வளவு சர்க்கரையைப் பயன்படுத்த முடியாது. எனவே உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. அதாவது, உங்கள் எடை அதிகரிப்பது உறுதி.
- தினமும் ஆரஞ்சு பழச்சாறு குடிப்பவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும். இந்த ஜூஸை தினமும் குடிப்பதால், அதிகப்படியான சர்க்கரை உடலுக்குள் செல்வதால், சிறுநீரகம் தொடர்பான நோய்களும் வர வாய்ப்புள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.