மாரடைப்பு வருவதை ஒரு மாதத்திற்கு முன்பே அறியலாம் - எப்படி தெரியுமா?
மாரடைப்பு என்பது இதயத்திற்கு இரத்த ஓட்டம் திடீரென தடைப்படும் செயற்பாடாகும்.
50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்த இந்த நோய் தற்போது வயது வித்தியாசமின்றி பலரையும் பாதித்து வருகிறது.
மாரடைப்பானது உடனே ஏற்படுவதில்லை. இது ஏற்படுவதற்கு முன்பே ஓரிரு அறிகுறிகளை ஒரு மாத்திற்கு முன்பே காட்டி விடும்.
அந்தவகையில் ஒருவரும் மாரடைப்பு ஏற்பட போகின்றது என்பதை எப்படி ஒரு மாத்திற்கு முன்பே தெரிந்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அறிகுறிகள்
- சோர்வு
- தூக்கமின்மை
- மூச்சுத் திணறல்
- பலவீனம்
- அதிக வியர்வை
- தலைச்சுற்றல்
- குமட்டல்
- மயக்கம்
- அடி வயிற்று வலி
- முடி உதிர்தல்
- மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு
- சீரான இதய துடிப்பின்மை
- கால், பாதம் மட்டும் முழங்கால் வீங்கிப் போதல்
ஏன் ஏற்படுகிறது?
- வயது
- உயர் கொலஸ்ட்ரால் அளவு
- உயர் இரத்த அழுத்தம்
- உடல் பருமன்
- நீரிழிவு
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுதல்
- புகைபிடித்தல்
- அதிக அளவு மன அழுத்தம்
- அதிக மது அருந்துதல்
மார்பு வலி, கைகள், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள அசௌகரியம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகளாகும்.
இருப்பினும், மாரடைப்பு பெண்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை அசாதாரண அளவு சோர்வு, தூக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
இதய ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான எடையை பராமரித்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் மாரடைப்பு வருவதை தடுக்கலாம் எனவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |