12 மணி நேரம் பறந்த இதயம்! பிரான்ஸ் மருத்துவர்கள் செய்த மருத்துவ சாதனை
12 மணி நேரம் சேமிக்கப்பட்ட இதயம் வெற்றிகரமாக பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
உலகின் முதல் நீண்ட இதய மாற்று அறுவை சிகிச்சை
பிரான்ஸில் மருத்துவ துறையில் ஒரு புரட்சிகரமான சாதனையாக 12 மணி நேரம் சேமித்து வைக்கப்பட்டிருந்த இதயத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பாரிஸின் Hôpital Universitaire La Pitié-Salpêtrière மருத்துவமனையில் 70 வயதான நபர் ஒருவர் இந்த மாற்று அறுவை சிகிச்சையை பெற்றுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைகாக வணிக பறக்கும் விமானம் மூலம் 6,700 கிலோமீட்டர் அட்லாண்டிக் கடலைக் கடந்து பாரிஸ் நகரத்திற்கு இதயம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக, நான்கு மணி நேரம் மட்டுமே இதயத்தை சேமித்து வைக்க முடியும் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், 12 மணி நேரம் இதயம் சேமித்து வைக்கப்பட்டு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக உறுப்பு தானங்களுக்கு பயன்படுத்தப்படும் பெரிய குளிர்சாதன பெட்டியில் (8 செல்சியஸ் வெப்பநிலையில் இதயத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும்) இதயம் கொண்டு வரப்பட்டதுடன், பயண நேரம் முழுவதும் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் சேமித்து வைக்கப்பட்டிருந்த நேரம் முழுவதும் இதயத்திற்கு தொடர்ந்து transfused செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
பிரான்ஸ் இதய மாற்று அறுவை சிகிச்சை (France heart transplant surgery)
12 மணி நேர இதய சேமிப்பு (12 hour heart preservation)
செயற்கை இரத்த ஓட்டம் (artificial blood flow)
12 மணி நேரம் பறந்த இதயம் (heart flown for 12 hours)
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (organ transplant surgery)