மறுவாழ்வை கொண்டு வருவதற்கான நேரம்! அறுவை சிகிச்சைக்கு பின் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்
ஹீதர் நைட் 127 ஒருநாள் போட்டிகளில் 2 சதத்துடன் 3548 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் ஹீதர் நைட்டுக்கு பதிலாக நடாலி சிவெர் கேப்டனாக செயல்பட்டார்
இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ஹீதர் நைட், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹீதர் நைட், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின்போது காயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
PC: Matt Impey / Shutterstock
இந்த நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக புகைப்படம் ஒன்றை ஹீதர் நைட் வெளியிட்டுள்ளார். அத்துடன், 'விரைவில் என்னை மீட்டெடுத்து ஓடுவதற்கு என் இடுப்பை கொஞ்சம் சுத்தம் செய்துவிட்டேன்.
துரதிருஷ்டவசமாக, என்னால் இந்தியத் தொடர் மற்றும் WBBL-யில் விளையாட முடியாது. ஆனால் நான் இந்த ஆண்டின் இறுதியில் திரும்பி வருவதையே இலக்காக கொண்டுள்ளேன். சிறிது நேரத்தைப் பயன்படுத்தி மறுவாழ்வை கொண்டுவருவதற்கான நேரம் இது!' என அவர் பதிவிட்டுள்ளார்.
Surgery ✅
— Heather Knight (@Heatherknight55) August 19, 2022
I’ve had a little clean out of my hip to get me back and running soon. Unfortunately it rules me out of the India series and the WBBL, but I’m aiming to be back by the end of the year ??. Time to make the most of a bit of time away and bring on the rehab! pic.twitter.com/4Mcwjs2nwN
ஹீதர் நைட் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுப்பதற்காக அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.