விமான சேவைக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தம்...பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி!
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து குறுகிய துரத்திற்கு பயணிக்கும் விமான சேவைகளுக்கான டிக்கெட் விற்பனையை குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வேளை நிறுத்ததிற்கு பிறகு விமான நிலையங்களில் ஏற்பட்ட பணியாளர்கள் தட்டுப்பாட்டால் பயணிகளை கையாளுவது, பொருள்களை கையாளுவது, அதிகப்படியான செக்-இன்களை சமாளிப்பது போன்றவை அதிக சிரமங்களுக்குள் உள்ளாகின.
இந்தநிலையில் பிரித்தானியா விமான நிலையத்தின் திறனைக் கட்டுப்படுத்தவும், பரவலான இடையூறுகள் மற்றும் விமான ரத்துச் செயல்களை சமாளிக்கவும் ஹீத்ரோவிலிருந்து பறக்கும் குறுகிய தூர விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை ஆகஸ்ட் 8ம் திகதி வரை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுத்தியுள்ளது.
IAGக்குச் சொந்தமான விமான நிறுவனம் உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய நிறுத்தங்களுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தம், வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் போது மீண்டும் முன்பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தைப் போலவே, ஹீத்ரோ விமான நிலையமும் வரிசைகள், சாமான்கள் தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, மையத்திலிருந்து ஒரு நாளைக்கு 100,000 பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திய பிறகு, கோடையிலும் டிக்கெட் விற்கும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு அதன் விமான நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அமெரிக்கா அடிமையாகிவிட்டது...ஈரான் அதிகாரி பரபரப்பு கருத்து!
ஹீத்ரோ கடந்த வாரம் தெரிவித்துள்ள கருத்தில் சரியான நேரத்தில் மற்றும் சாமான்களைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்துள்ளது கூறியுள்ளது.
Reuters