அமெரிக்கா அடிமையாகிவிட்டது...ஈரான் அதிகாரி பரபரப்பு கருத்து!
அமெரிக்கா பொருளாதார தடைகளுக்கு அடிமையாகி விட்டதாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் நாசர் கனனி கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது நேற்று புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு தக்கப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் நாசர் கனனி(Nasser kanaani) செய்வாய் கிழமை எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை ஜோ பைடன் அரசாங்கம் தொடர்வதுடம் மட்டுமில்லாமல் அதனை மேலும் விரிவுபடுத்து வருகிறது.
creadit: EPA
இந்த பொருளாதார அதிகபட்ச அழுத்தக் கொள்கைகள் வீரியமற்றது மற்றும் பயனற்றது என்ற போதிலும் அமெரிக்கா பொருளாதார தடைகளுக்கு அடிமையாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; பிரித்தானியாவை வாட்டும் வெப்ப அலைகள்: பயிற்சியில் ராணுவ வீரருக்கு நடந்த பரிதாபம்!
அமெரிக்காவுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் புத்துயிர்ப்பு பெறுவது சாத்தியமில்லை என்று செய்திகள் வெளிவரும் நிலையில், அமைச்சகத்தின் கருத்துக்கள் வெளியாகியுள்ளது. மேலும் அணு குண்டுகளை தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.