ஹீத்ரோ விமான நிலைய சுரங்கத்தில் தீ விபத்து: முக்கிய சாலைகள் மூடல், பயணிகளுக்கு கடும் தாமதம்!
ஹீத்ரோ விமான நிலைய சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது.
ஹீத்ரோ சாலைகள் மூடல்
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலைய சுரங்கப்பாதையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.
அதே சமயம் டெர்மினல் 2 மற்றும் 3க்கான சாலை அணுகல் பகுதியளவில் முடங்கியதால், விமானப் பயணிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
ஹீத்ரோ விமான நிலையம் வெளியிட்ட அவசர அறிவிப்பு
அதிகாலை ஏற்பட்ட வாகன தீ விபத்தின் காரணமாக, டெர்மினல் 2 மற்றும் 3க்கு செல்லும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பயணிகள் விமான நிலையத்திற்கு விரைவாக வர கூடுதல் நேரம் ஒதுக்கவும், முடிந்தவரை ஹீத்ரோ எக்ஸ்பிரஸ் (Heathrow Express) போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் அறிவுத்தப்படுகிறார்கள் என்று ஹீத்ரோ விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளது.
மேலும், "இந்த அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்" என்றும் தெரிவித்துள்ளது.
An earlier vehicle fire affecting road access to Terminals 2 and 3 has now been resolved. All roads have now reopened but there continues to be some congestion around the airport. We apologise for the disruption caused this morning. pic.twitter.com/cC2PErBoIQ
— Heathrow Airport (@HeathrowAirport) March 10, 2025
நெரிசலில் சிக்கிய முக்கிய சாலைகள்
இந்த தீ விபத்து M4 நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
M4 ஸ்பர் மற்றும் A4 நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிந்தது.
சுரங்கப்பாதையில் ஒரு வழி பாதை மட்டுமே செயல்படுவதால், வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |