மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கா; இதை அலட்சியமாக எடுக்காதீங்க!
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில்அதிக ரத்தப்போக்கு ஏற்படும். பூப்படைந்த முதல் ஒரு சில மாதங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு இயல்பானது தான். ஆனால் தொடர்ந்து ஒரு சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இதை எளிதான ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஏனென்றால் அது பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மெனோபாஸ் நிலையை அடைந்தவர்களுக்கு இவ்வாறு ஏற்பட்டால் அது கர்ப்பப்பை புற்றுநோயின் முந்தைய நிலையாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகவே ஏன் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தபோக்கு ஏற்படுகின்றது? அதற்கு சிகிச்சை என்ன என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
அதிக ரத்தப்போக்கு என்றால் என்ன?
ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது மற்றும் ஒருநாளைக்கு 2-3 நாப்கின்கள் முழுவதும் நனைந்து வெளியேற்றுவது இவற்றைத்தான் அதீத ரத்தப்போக்கு என்கிறோம்.
ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது நிச்சயமாக அதீத ரத்தப்போக்கின் அறிகுறிதான்.
அதிகமான ரத்தப்போக்கு இருந்தால், ரத்தம் உறைந்து அப்படியே கட்டி கட்டியாக வெளியேறும்.
வயதின் அடிப்படையில் ஏற்படும் நோய்
20 - 25 வயது
`Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், உணவு முறை சீராக இல்லாதது இது ஏற்பட வழிவகுக்கும்.
25 - 35 வயது
கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாக இருக்கும். நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். ஆகவே அதை உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.
45 வயதை தாண்டியவர்கள்
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.
ஏன் ஏற்படுகின்றது?
-
ஹார்மோன் சமநிலையின்மை எனும் காரணத்தினாலும் ஏற்படும்.
- மாதவிடாயின் போது கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படும்.
-
கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.
- கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படலாம்.
-
கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் ஏற்படும்.
-
தைராய்டு பிரச்னைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளாலும் ஏற்படும்.
இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். உதாரணமாக கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாசிப்பழம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். உதாரணமாக, கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாளி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
இவ்வாறு உணவு முறையை மாற்றினாலும் இந்த பிரச்சினை நிற்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |