பாரீஸ் ஒலிம்பிக்ஸ்... கன மழையால் தெருவுக்கு தள்ளப்பட்ட பூனை அளவிலான எலிகள்
ஒலிம்பிக் விளையாட்டுகளை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாரீஸ் நகரில் குவிந்துள்ள நிலையில், பூனை அளவிலான எலிகளால் கடும் அவதிக்கு இலக்காவதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 மில்லியன் எலிகள்
பாரீஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கி இது இரண்டாவது நாள். ஆனால் கடந்த 48 மணி நேரத்தில் 2 அங்குலம் அளவுக்கு மழை பெய்துள்ள நிலையில் அங்குள்ள 6 மில்லியன் எலிகளை அவற்றின் நிலத்தடி மறைவிடங்களில் இருந்து வெளியேற வைத்துள்ளது.
உணவகங்கள், மதுபான விடுதிகளில் மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து பல மைல்கள் கடந்து விளையாட்டுகளை கண்டுகளிக்க வந்த ரசிகர்களையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது.
ஆனால் அவைகளின் சிறுநீரால் ஏற்படும் உடல்நல ஆபத்து விளையாட்டு நிகழ்வுகளை ஏற்கனவே பாதிப்படைய வைத்துள்ளது. எலிகளின் சிறுநீரில் காணப்படும் பாக்டீரியாக்கள் லெப்டோஸ்பிரோசிஸ் நோயை ஏற்படுத்துவதுடன், இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பையும் தூண்டுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஜூலை 28ம் திகதி, ஒலிம்பிக் டிரையத்லானுக்கான திட்டமிடப்பட்ட பயிற்சி அமர்வை சீன் நதியில் பாதுகாப்பற்ற அளவு மாசுபாடு காரணமாக அமைப்பாளர்கள் ரத்து செய்தனர்.
மொத்தமாக சீர்குலைத்தது
மாசு அளவு குறையாவிட்டால் டிரையத்லான் போட்டி வேறு பகுதிக்கு மாற்றப்படலாம் என்றே கூறுகின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான எலிகள் வாழும் நகரம் பாரீஸ். தலைநகரில் வசிக்கும் 2.2 மில்லியன் மக்களை விடவும் இந்த உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.
இயந்திர பொறிகள் மற்றும் இரசாயன தீர்வுகள் ஈபிள் கோபுரத்தின் பின்புறம் உள்ள பூங்கா போன்ற அதிக எண்ணிக்கையிலான எலிகள் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டன.
மட்டுமின்றி, எதிர்பாராத புயல் மழை துவக்க விழாவினை மொத்தமாக சீர்குலைத்தது. கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் துவக்க விழா மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |