சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.., மேம்பாலத்தை கார் பார்க்கிங்காக மாற்றிய பொதுமக்கள்
சென்னையில் கனமழை பெய்து வருவதால் வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களது கார்களை பொதுமக்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேம்பாலத்தில் கார் பார்க்கிங்
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னைக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வாகன ஓட்டிகள் தங்களது கார்களை நேற்றே வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்திவைத்தனர்.
இதையடுத்து, மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அபராதம் விதிக்கப்படவில்லை என்றும், வதந்திகள் பரவுவதாகவும் தாம்பரம் காவல் சரகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள வேளச்சேரி மேம்பாலத்தில் 500-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |